கமுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறையில் புரட்டாசி பஜனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2026 04:10
கமுதி: கமுதியில் ராமானுஜர் பஜனை மடம் சார்பில் நுாறாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறையில் புரட்டாசி மாத பஜனை ஊர்வலம் நடக்கிறது.
கமுதி ராமானுஜ பஜனை மடக்குழு சார்பில் புரட்டாசி மாதத்தில் மிருதங்கம் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்து பெருமாள் பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபட்டு வருகின்றனர்.பஜனை மடத்தில் துவங்கி காமாட்சி அம்மன், காளியம்மன், விநாயகர், பெருமாள், முருகன், ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துமாரியம்மன் உச்சிமாகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பஜனை பாடல்கள் பாடி வருகின்றனர்.
அப்போது ஒவ்வொரு வீட்டிலும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் பெறப்பட்டு புரட்டாசி மாதம் கடைசியில் ராமானுஜர் மடத்தில் மகேஸ்வர பூஜை நடைபெறும். அதில் பொதுமக்களிடம் பெறப்பட்ட அரிசி உட்பட பொருட்களை வைத்து அன்னதானம் வழங்கப்படும். கமுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடைமுறையில் உள்ளதாக பஜனை குழுவினர் தெரிவித்தனர். கவுரவ செட்டியார் உறவின்முறை டிரஸ்டி ஜெயகுரு தலைமையில் ராமானுஜ பஜனை குழு மற்றும் கவுரவ இளைஞர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.