இடையஞ்சாவடி சீனிவாச பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2026 11:10
வானுார்: இடையஞ்சாவடி கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
ஆரோவில் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிேஷகமும், தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர். பின், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தேர் மாட வீதியுலா வழியாக சென்று கோவிலை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் ஊர்பொது மக்கள் செய்திருந்தனர்.