Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்டோபர் 11ல் சென்னை வரும் பிரதமர் ... குன்றத்து கோயில்களில் அக்.11 ல் நவராத்திரி விழா குன்றத்து கோயில்களில் அக்.11 ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமாயணத்துக்கு தனி தர்மமும், குணமும் உண்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமாயணத்துக்கு தனி தர்மமும், குணமும் உண்டு

பதிவு செய்த நாள்

06 அக்
2026
12:10

மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில், அகில பாரத ஸாது சங்கம் சார்பில், தினமும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண சொற்பொழிவு நடக்கிறது.

இதில் ‘பஞ்சவடி’ என்ற தலைப்பில் ரெங்கன் ஜி சிஷ்யர்ஷ்யாம் சுந்தர் பேசியதாவது:ராமரின் வனவாசத்தை தடுத்து நிறுத்த தந்தை தசரதர் உட்பட பலர் முயன்றும், முடியவில்லை.

காட்டில் ராமர் நுழையும்போது, அங்கிருந்த ரிஷிகள் கைக்கூப்பி நின்று வரவேற்றனர். ராமருக்கு பெரியவர்களிடம் உட்கார்ந்து அவர்களின் கதைகளை கேட்பது பிடிக்கும். நாம் இன்று பெரியவர்களிடம் பழகுவதே கிடையாது.

நம் சனாதன தர்மத்தில் சொல்வதற்கு ஏராளமான கதைகள் இருந்தாலும், கலாசாரத்தை அறிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறோம். அதற்கு காரணம் கதைகள் சொல்லக்கூடிய பெரியவர்களுக்கும், நமக்குமான இடைவெளி அதிகரித்து விட்டது.

வாழ்க்கையைரசித்து வாழ்வது எப்படி என்பதைலட்சுமணன் மூலம் அறியலாம்.

அந்த வகையில் காட்டில் லட்சுமணன் ரசித்து அமைத்த ஆசிரமத்தை கண்ட ராமருக்கு தனது அரண்மனையே மறந்து விட்டது.

அவர் லட்சுமணனிடம், அப்பா தசரதர் மறையவில்லை; உன் ரூபத்தில் தான் இருக்கிறார். உன்னைப் பார்க்கும்போது அப்பா நினைவு வருகிறது என்றார்.

ராமாயணம் ஒரு காவியம் என்று வால்மீகி வரையறுக்கிறார். ஆனால் இதில் வரும் சம்பவங்கள் உண்மையாக நடந்தவை என்பதால் இதிகாசம் என்றும் சொல்கிறோம். ராமாயணத்திற்கு என்று தனிதர்மமும், குணமும் உண்டு.

அதை உணர ராமாயணத்தை ஆழமாக அறிவது அவசியம்.ராமாயணபாராயணம் செய்வோருக்கு எந்தவொரு குறையும் வாழ்வில் வராது என்றார்.

இன்று (அக்.6) மாலை 4:00 மணிக்கு இச்சொற்பொழிவு தொடர்கிறது. அகில பாரத ஸாது சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar