உத்தரகோசமங்கை கோவிந்த பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2026 03:10
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை கண்மாய்க்கரை அருகே கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இன்று நடந்த மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர் கோவிந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. யாக வேள்வி வளர்க்கப்பட்டு புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் திருமால் கோடாங்கி செய்திருந்தார். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை யாதவ சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.