Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலவலசை அய்யனார் கோயில் எருதுகட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இளைப்பாறும் மண்டபம் இடித்து அகற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இளைப்பாறும் மண்டபம் இடித்து அகற்றம்

பதிவு செய்த நாள்

08 அக்
2026
03:10

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவில் தேர் வீதியில் இருந்த அம்மா இளைப்பாறும் மண்டபத்தை, நேற்று முன்தினம் இரவு, கோவில் நிர்வாகம் இடித்து அகற்றியது.

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியின் போது, அப்போதைய தக்கார் ஜெய்சங்கர், மலைக்கோவில் தேர் வீதியில் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக, கோவில் நிர்வாகம் மூலம், அம்மா இளைப்பாறும் மண்டபம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில், ராஜகோபுரத்தில் இருந்து தேர் வீதியை இணைக்கும் பகுதியில், புதிய கோபுரம் கட்டுவதற்கும், கோபுரம் வழியாக இருபுறமும் படிகள் அமைக்கவும் தீர்மானித்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த கோபுரத்திற்கு இடையூறாக இருந்த அம்மா இளைப்பாறும் மண்டபம், ஹிந்து அறநிலைய துறையின் ஆணையர் அனுமதி பெற்று, கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில், நேற்று முன்தினம் இரவு, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

இந்த மண்டபம் இடிக்கப்பட்டதால், மலைக்கோவிலில் பத்து நாட்களுக்கு, தங்கத்தேர், வெள்ளித் தேர், வெள்ளி மயில் வாகனம், அன்ன வாகனம் போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar