வல்லக்கோட்டை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.28 லட்சம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2026 10:10
ஸ்ரீபெரும்பதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. இதில், 28.69 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுகிறது. அதன்படி இன்று, காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையிலான ஊழியர்கள், உண்டியல்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 28,69 லட்சம் ரூபாய், 27 கிராம் தங்கம், 2,890 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டன.