Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் முருகன் கோவிலில் ... விருந்தீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் விருந்தீஸ்வரர் கோயிலில் திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் திருச்செந்துார் முருக பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் திருச்செந்துார் முருக பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 அக்
2026
06:10

துாத்துக்குடி: இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால், திருச்செந்துார் வரும் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.


துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துார் வருவதால், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு இரவு நேரத்தில் திருச்செந்துாரில் இருந்து துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். 


முருக பக்தர்கள் கூறியதாவது: திருச்செந்துார் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல, மூன்று ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இரவு, 8:00 மணிக்கு மேல், ரயில் போக்குவரத்து கிடையாது என்பதால், பஸ்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் இரவு, 7:00 மணிக்கு மேல் திருச்செந்துாரில் இருந்து வெளியூர் செல்ல போதிய பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. மதுரை, திருச்சி செல்லும் பஸ்களில் துாத்துக்குடி செல்வதற்கு கூட ஏற்றுவது கிடையாது. கூட்டம் அதிகம் இல்லை என்றால் மட்டும் ஏற்றுகின்றனர்.


பஸ்களில் இடம்பிடிப்பதற்காக முட்டி மோதுவதால், பக்தர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. கோவில் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் நிலையில், திருச்செந்துாரில் இருந்து துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். பஸ் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை தவிர்க்க, போக்குவரத்துத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar