Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருந்தீஸ்வரர் கோயிலில் திரளான ... பக்தியே தமிழர்களின் அடையாளமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படை;  மலேசியாவில் சத்குரு பேச்சு பக்தியே தமிழர்களின் அடையாளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா

பதிவு செய்த நாள்

09 அக்
2026
06:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று நடைபெற்றது. 


கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்படும். சிறப்பு மற்றும் பொது பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு, வேல் பல்லக்கில் ரத வீதிகளில் உலா சென்று மலைமேல் கொண்டு செல்லப்படும். அங்கு சுப்ரமணியர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும். உச்சி கால நேரத்தில் கோயில் சிவாச்சார்யார்களால் வேல், சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகங்கள் நடக்கும்.   விழாவை முன்னிட்டு இன்று மலை மேல் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் கிராமத்தினர் மலைமேல் வேல் கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலையில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்பு கிராமத்தினர் மலைமேல் வேல் கொண்டு சென்றனர். மாலை 5:30 மணிக்கு பல்லக்கில் வேல் புறப்பாடாகி பெரியராத வீதி பழனி ஆண்டவர் கோயில் வழியாக மலை மேல் கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக காலையில் ரத வீதிகளில் வேல் புறப்பாடாகும். இன்று மாலையில் வேல் புறப்பட்டதால் நேராக மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.


12 நிபந்தனைகள் விதிப்பு: இந்தாண்டு இத்திருவிழா குறித்து கோயில் நிர்வாகம், மலையை பராமரிக்கும் மத்திய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தது. கோயில் துணை கமிஷனர் செல்விக்கு நேற்று  மத்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தில், மலை மேல் நெருப்பினால் சமையல் செய்யக்கூடாது உட்பட 12 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதை அறிந்த மக்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து அதிகாலை 2:00 மணிக்கு கலைந்து சென்று இன்று காலை மீண்டும் கோயில் முன்பு கூடினர். போலீசார் குவிக்கப்பட்டனர். மலை மேல் கதம்ப சாதம் சமைக்க அனுமதிக்காவிட்டால் மலைமேல் வேல் கொண்டு செல்ல மாட்டோம் எனக்கூறிவிட்டு கோயில் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.


கடிதத்தால் குழப்பம்: இதற்கிடையே இன்று மதியம் மத்திய தொல்லியல் துறையினரிடமிருந்து கோயில் அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில், ‘வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் தரப்பில், ‘மத்திய தொல்லியல் துறை முதலில் அனுப்பிய கடிதத்தில் மலை மேல் சமைப்பதற்கு தடை விதித்திருந்தது. அதை நீக்கி கடிதம் அனுப்புமாறு நாங்கள் கடிதம் அனுப்பி இருந்தோம். அடுத்து வந்த கடிதத்தில் அந்த வாசகத்தை நீக்கியதாக தொல்லியல்துறை குறிப்பிடவில்லை’ என்றனர். குழப்பம் அடைந்த உள்ளூர் மக்கள் கோயில் முன்பு கூடி ஆலோசித்தனர்.


காலைக்கு பதில் மாலை: ஆண்டுதோறும் வேல் எடுக்கும் திருவிழாவில் காலை 9:30 மணிக்கு வேல் புறப்பட்டு, ஒருமணி நேரம் வீதி உலா வரும். 10:30 மணிக்கு மலை மேல் கொண்டு செல்லப்படும். காலை 11:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி கையில் வேல் வழங்கப்படும். மதியம் 12:00 மணிக்கு சுனை தீர்த்திற்கு சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று அபிேஷகம் செய்து மீண்டும் சுவாமி கையில் கொடுப்பர். இதன் பிறகு 150 படி அரிசியில் கிராம மக்களால் கதம்ப சாதம் தயார் செய்து சுவாமிகளுக்கு படைத்து பிரசாதமாக வழங்குவர். நேற்று தடை உத்தரவு, நீதிமன்ற விசாரணை போன்ற காரணங்களாலும், மாலையில் நீதிமன்றத்தின் சாதகமான உத்தரவாலும் மாலை 5:30 மணிக்குதான் கோயிலைவிட்டே வேல் மலைக்கு புறப்பட்டது. முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார்.


பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு: மலை மேல் வேல் எடுக்கும் திருவிழாவில் மலைமேல் வேல் கொண்டு செல்லும் காட்சியும், சுனை தீர்த்தத்தில் சிவாச்சாரியார்களால் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படும் காட்சிகளையும் வெளியிடுவதற்காக பத்திரிகையாளர்கள் மலை மேல் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் மலை மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar