Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » தாமாஜி பண்டிதர்
தாமாஜி பண்டிதர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2011
12:48

பேதரி... வயல்கள் சூழ்ந்த அழகிய கிராமம். இவ்வூரில் அவதரித்த தவசீலர் தாமாஜி பண்டிதர். வேதம் கற்ற வேதியர் குலத்தவர். பெரும் தர்மசிந்தனை கொண்ட தாளாளர். மக்கள் இவரை ஆசானாகவும், நண்பராகவும், காக்கும் கடவுளாகவும் பாவித்தனர். இவரது அரும் குணங்களை அறிந்த அந்நாட்டு மன்னன் அவரை மங்களபட் என்ற ஊருக்கு அதிகாரியாக நியமித்தார். தாமாஜி அவ்வூர் மக்களிடையே தெய்வ பக்தியை வளர்த்தார். ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பது உலக நியதி. அதன்படி மழை பெய்யாமல் வானம் வஞ்சித்தது. பஞ்சம் தலை தூக்கியது. மழைக்காலம்வரும் வரை மக்களை காப்பதற்கு தாமாஜி. தான் சேர்த்து வைத்திருந்த தானியங்களை எல்லம் வாரி வாரி வழங்கினார். இதனால் இவரது புகழ் பண்டரிபுரம் வரை எட்டியது. அங்கு வசித்த அந்தணர் ஒருவர் தாமாஜியின் வீட்டிற்கு வந்தார். அவரை அன்புடன் வரவேற்ற தாமாஜி விருந்தே படைத்துவிட்டர். இலையில் உணவைக் கண்டதும் அந்தணரின் கண் கலங்கியது. சுவாமி ! கண்கள் ஏன் கலங்குகின்றன ? என பரிவோடு கேட்டார் தாமாஜி. அதற்கு அந்த அந்தணர், ஐயா ! நான் உணவு கண்டு ஒரு வாரம் ஆயிற்று. பண்டரிபுரத்தில் என் மனைவி மக்கள் பட்டினியாய் கிடக்கிறார்கள். அவர்களை நினைத்து கலங்கினேன், என்றார். சுவாமி ! கலங்க வேண்டாம். உணவு கொள்ளுங்கள் என அவரை ஆசுவாசப் படுத்தினார் தாமாஜி. பின்னர் ஐம்பது மூடை நெல்லை வண்டியில் ஏற்றி தகுந்த காவலுடன் அவரை பண்டரிபுரத்திற்கு அனுப்பிவைத்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் ஊர் சென்றார். இந்தச்செய்தி ஊருக்குள் பரவியது. இங்கே நாம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பண்டரிபுரத்திலிருந்து வந்த அந்தணருக்கு, தாமாஜி நெல் மூடைகளை ஏற்றி அனுப்பியிருக்கிறாரே ! இதை விடக்கூடாது. வண்டியை மடக்க வேண்டும், என கிராமமக்கள் முடிவெடுத்தனர். அதன் படியே மூடைகளை பறித்துச் சென்றுவிட்டனர். அந்தணர் புலம்பியபடியே தாமாஜியைக் காணச் சென்றனர். செய்தி கேட்ட தாமாஜி, சுவாமி ! உங்கள் ஒரு குடும்பம் உண்பதை பல குடும்பங்கள் உண்ண வேண்டும் என்பது என் அப்பன் பாண்டுரங்கனின் விருப்பம் போல் இருக்கிறது. போனால் போகிறது விடுங்கள். உடனே ஊர் சென்று உங்கள் மனைவி மக்களை இங்கேயே அழைத்து வாருங்கள், என கூறி செலவுக்கு சில வராகன்களை கொடுத்தார்.

இதையறிந்து சுற்றுப்புற பகுதி மக்களெல்லாம் மங்கள்பட் நோக்கி படையெடுத்தனர். எலும்பும் தோலுமாய் இருந்த அந்த எளிய மக்களைக்கண்ட தாமாஜி மிகவும் மனம் வருந்தினர். நம் களஞ்சியத்தை எல்லாம் காலி செய்துவிட்டோமே. இம்மக்களுக்கு என்ன செய்து ? என மனம் குழம்பினார். கண்ணீர் வழிந்தது. அந்த நேரத்தில் அவரது மனைவி, சுவாமி ! அரசாங்கத்திற்கு வரியாக வசூலித்த நெல் அம்பாரமாய் குவிந்துள்ளதே ! அதை தர்மம் செய்வோம். அடுத்த வருடம் நமது வயலில் விளைந்ததும் சேர்த்து அரசுக்கு செலுத்திவிடலாமே, என யோசனை கூறினாள். துள்ளி எழுந்தார் தாமாஜி. நிறைந்த மனதுடன் வந்த மக்களுக்கு அள்ளிக்கொடுத்தார். மக்கள் அவரை வாயார வாழ்த்திச் சென்றனர். இந்த விஷயம் மன்னனுக்கு எட்டியது. தன்னிடம் அனுமதி பெறாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டாரே என கோபப்பட்டான். தாமாஜி கைது செய்யப்பட்டார். காவலர்கள் அவரை விலங்கிட்டு அழைத்து வந்தனர். வழியில் பண்டரிபுரம் கோயில் வந்தது. காவலர்களிடம் அனுமதி பெற்று கோயிலுக்கு சென்றார் தாமாஜி. ஹே... பாண்டுரங்கா ! உன் மக்களுக்கு அளித்தது உனக்கே அளித்தது என தத்துவம் பேசுகிறாய். ஆனால் நீ சொன்னதுபோல செய்தால் தண்டனை கிடைக்கச் செய்கிறாய். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாயே ! நீ அருள் செய்தால் மழை பொழிந்து நாடு செழிக்க எவ்வளவு காலம் ஆகிவிடும். பஞ்சத்தை உண்டாக்கி மக்களை ஏன் வாடவிடுகிறாய் ? இது நியாயமா? என கேட்டார். இந்நேரத்தில் அரசவையில் மன்னன் வீற்றிருந்த போது வாட்ட சாட்டமான கரிய நிறம் கொண்ட யாரையும் வசப்படுத்தும் கண்களை உடைய வாலிபன் ஒருவன் தலையில் முண்டாசு கட்டி, முழங்காலுக்கு மேல் ஏறிய வேஷ்டி உடுத்தி வந்து நின்றான். அரசே ! நான் தலையாரி. தாமாஜி பண்டிதர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி நெல்லுக்குரிய தொகையான எண்பத்து நாலு லட்சம் வராகனை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதை பெற்றுக்கொண்டு ரசீது தாருங்கள், என்றான். தாமாஜி கைது செய்யப்பட்டு இன்னும் சிறிது நேரத்தில் அரசவைக்கு வர இருக்கும் நிலையில் இப்படி ஒருவன் வந்து நிற்கிறானே என மன்னன் திகைத்தான். இதற்குள் அந்த இளைஞன் தன் கையில் இருந்த சிறு மூடையை பிரித்து காசை கொட்டினான்.

கொட்டக்கொட்ட விழுந்துகொண்டே இருந்தது. புத்தம் புதிய பொன் நாணயங்கள் ஜொலித்தன. மன்னன் மேலும் வியந்தான். இந்த சிறு மூடையில் இவ்வளவு நாணயங்கள் எப்படி இருந்தன என மெய்சிலிர்த்தான். இளைஞனை உற்றுப் பார்த்தான். ஏ தலையாரி ! உண்மையைச் சொல். நீ யார் ? எந்த ஊர் ? உன் பெயர் என்ன ? இதற்கு முன் உன்னை நான் பார்த்ததில்லையே ! புதிதாக வேலையில் சேர்ந்திருக்கிறாயா ? என கேள்வி மேல் கேள்வி கேட்டான். இதற்கு அந்த இளைஞன், மகாராஜா ! நான் ஒரு அனாதை. எனக்கென்று ஒரு பெயர் இல்லை. ஊரார் என்னை ஆயிரம் பேர் சொல்லி அழைப்பார்கள். யார் என்னை பிரியமாக மதிக்கிறார்களோ அவர்களிடமே தங்கிவிடுவேன். நீங்கள் சீக்கிரம் ரசீது கொடுங்கள். நேரமானால் பண்டிதர் கோபித்துக்கொள்வார், என்றான். ரசீதை பெற்றுக்கொண்டு அவன் அங்கிருந்து அகன்றான். அப்போது அரசவைக்கு தாமாஜி பண்டிதர் இழுத்து வரப்பட்டார். அவரை கட்டியணைத்த அரசன், பண்டிதரே ! என்னை மன்னித்துக் கொளளுங்கள். இப்போதுதான் தாங்கள் கொடுத்தனுப்பிய பணம் வந்து சேர்ந்தது. அறியாமல் உங்களை கைது செய்துவிட்டேன். பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டதாக நீங்கள் ஏன் முன்கூட்டியே தகவல் சொல்லவில்லை. காவலர்களிடமாவது சொல்லியிருக்கலாமே, என்றான். இதற்கு பண்டிதர், நான் பணமே கொடுத்து அனுப்பவில்லை. உங்களிடம் யார் கொடுத்தது? என்றார். இதன்பிறகுதான் வந்தவர் சாட்சாத் பாண்டுரங்கன் என்பது இருவருக்குமே புரிந்தது. தாமாஜியால் தனக்கும் இறைவனின் தரிசனம் கிடைத்ததை எண்ணி மன்னன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். இதன்பிறகு தாமாஜி அரசுப்பணியை உதறிவிட்டு பண்டரிபுரத்திலேயே தங்கியிருந்து, பூஜை செய்து தனது காலத்தைக் கழித்தார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.