பந்தலூர் மற்றும் உப்பட்டி முருகன் கோவில்களில் அன்னாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2026 03:10
பந்தலூர் முருகன கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பந்தலூர் முருகன் கோவிலில் இன்று காலை முதல் முருகனுக்கு கோவில் அர்ச்சகர் ரமேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மதியம் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் பெண் பக்தர்கள் பங்கேற்று பிரதோஷ வழிபாடு பாடல்களை பாடி இறைவழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதத்துடன், அன்னதானம் வழங்கப்பட்டது.கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.