குமரகோட்டம் முருகன் கோவிலில் ரிஷி கோபுரம், மூலவர் விமானம் பாலாலயம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2026 04:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று, ரிஷி கோபுரம், மூலவர் விமானம் பாலாலய விழா சிறப்பாக நடைபெற்றது.
பாலாயலம் என்பது, கோவிலில் திருப்பணிகள் அல்லது புனரமைப்பு, கும்பாபிஷேகம் நடைபெறும் சமயத்தில், மூலவரின் சக்தியை தற்காலிகமாக வேறோரு இடத்திற்கு மாற்றி, அங்கு வழிபாடு நடத்தும் முறையாகும். இன்று நடைபெற்ற பாலாலய விழாவிற்கு கோவில் செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கினார். காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு, கலச அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. பாலாலயம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிகட்ட திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று, விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது..