திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் மற்றும் ஆதி திருத்தளிநாதர் கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடந்து தெப்பக்குளத்தில் ஜீவராசிகளுக்கு அன்னம் வழங்கப்பட்டது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத பெளர்ணமியன்று மூலவருக்கு அன்னாபிேஷகம் நடைபெறும். இன்று காலை 10:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து அன்னம்,காய்கறி,பழங்கள் படையிலிடப்பட்டது.பின்னர் அன்னத்தால் மூலவர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.பின்னர் மூலவர் அலங்காரத்தை களைத்து எடுக்கப்பட்ட அன்னத்தை சிவாச்சார்யர்கள் அருகிலுள்ள தெப்பக்குளமான சீதளி தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டு, குளத்திலுள்ள ஜீவராசிகளுக்கு அன்னம் வழங்கப்பட்டது.பின்னர் கோயில் புறப்பாடாகி மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஆதி திருத்தளிநாதர் கோயிலிலும் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்து சீதளி குளத்தில் அன்னம் கரைக்கப்பட்டது.