புதுச்சேரி சாய்பாபா கோவிலில் ஸ்ரீ சாயி சத்யநாராயண விரத பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2026 11:10
புதுச்சேரி: புதுச்சேரி ஆம்பூர் சாலை ஓம் சீரடி அற்புத சாய்பாபா கோவிலில் ஸ்ரீ சாயி சத்யநாராயண விரத பூஜை நடந்தது.
புதுச்சேரி ஓம் சீரடி அற்புத சாய்பாபா சேவா சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் ஆம்பூர் சாலையில் உள்ள ஓம் சீரடி அற்புத சாய்பாபா கோவிலில் சத்யநாராயண விரத பூஜை நேற்று மாலை நடந்தது. முன்னதாக ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 7 மணிக்கு சாய் சத்தியநாராயணா பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு ஆர்த்தி எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னம் வழங்கப்பட்டது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.