Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு ... கோவை ராம்நகர் கோதண்ட ராமர் கோயிலில் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி கோவை ராம்நகர் கோதண்ட ராமர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ராஜகோபுரத்தில் கான்கிரீட் பூச்சு இடிந்து சேதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ராஜகோபுரத்தில் கான்கிரீட் பூச்சு இடிந்து சேதம்

பதிவு செய்த நாள்

28 அக்
2026
10:10

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரத்தில் அலங்கார கட்டமைப்பின் ஒரு சிறிய பகுதி இடிந்து விழுந்துள்ளது.


திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, அம்மா மண்டபம் வழியாக சென்றால், தெற்கு வாசலுக்கு முன், 236 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சிளிக்கும் ராஜகோபுரம். இந்த கோபுரத்தின் முகப்பு பகுதியில், முதல் நிலையில், துவாரபாலகர் சிலைக்கு மேல் இருந்த கட்டுமானத்தின் சிறு பகுதி, நேற்று முன் தினம் இரவு இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஏற்கனவே, கிழக்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. தற்போது, அந்த கோபுரம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராஜகோபுரத்திலும் சிறு பகுதி இடிந்து விழுந்து உள்ளது. ராஜகோபுரத்தில் இடிந்து விழுந்த இடத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தொடர் மழை காரணமாக நனைந்து இருந்த கோபுர கட்டுமானம், குரங்குகளின் வேகமான நடமாட்டதால் இடிந்து இருக்கலாம். மேலும், ரெங்கநாதர் கோவிலில் உள்ள 21 கோபுரங்களையும் பாரம்பரிய கட்டிடக்கலை பாணியை மாற்றாமல், பராமரித்து வலுப்படுத்துவதற்கான முன்மொழிவு, கடந்த 2023ம் ஆண்டு, முன் வைக்கப்பட்டு, அது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஸ்ரீரங்கம் கோவிலின் முக்கிய அடையாளமான ராஜகோபுரத்தில் லேசான சேதம் ஏற்பட்டு உள்ளதால், கோவிலில் உள்ள 21 கோபுரங்களையும் வலுப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்து உள்ளோம். அதற்கான செலவு மதிப்பீடு குறித்த ஆய்வு அறிக்கை தயாரித்து, சமர்ப்பிக்க உள்ளோம், என்று தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாஸ்து நாளில் புதிய வீடு கட்டத் தொடங்குவது, மனை வாங்குவது, மற்றும் கட்டடப் பணிகள் மேற்கொள்வது மிகவும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் தேவஸ்தானத்தில் உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினரின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar