கோவை ராம்நகர் கோதண்ட ராமர் கோயிலில் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2026 10:10
கோவை: ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் தேவஸ்தானத்தில் உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நேற்று மாலை துவங்கியது.
தெலுங்கு, கர்நாடக மொழிகளில் பிரசித்தி பெற்ற பத்ராசல ராமதாசர் இயற்றிய நவரத்ன கீர்த்தனைகளும், 108 கீர்த்தனைகளும் புகழ்பெற்றவை. ராமபிரானை நினைத்து உருகி பாடும், ‘ பலுகே பங்கார மாயனா ராமபத்ர ராரா போன்ற பாடல்களை கல்யாணராம பாகவதர் குழுவினர் பாடினர். பார்வையாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். இன்று ஸ்ரீ புரந்தரதாசர் கீர்த்தனைகளையும், நாளை சிவ கீர்த்தனைகள் மற்றும் ஸ்ரீ தியாகப்பிரம்ம கீர்த்தனைகளையும் குழுவினர் பாடுகின்றனர். இதில் மிருதங்கம், கடம், மோர்சிங், வயலின் உள்ளிட்ட பக்கவாத்தியங்கள் இடம் பெற்றன.