ஐப்பசி புதன் வழிபாடு: லஷ்மி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2026 12:10
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 11 பகுதியில் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் லஷ்மி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.