அன்னூர் சின்னம்மன் கோவிலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2026 02:11
அன்னூர்: அன்னூர் சின்னம்மன் கோவிலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவிநாசியிலிருந்து, கருவலூர், அன்னூர் வழியாக, மேட்டுப்பாளையத்துக்கு, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வருகிறது. அன்னூர் பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டி, மேட்டுப்பாளையம் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சின்னம்மன் கோவில் உள்ளது. நான்கு வழி சாலைக்காக இக்கோவிலை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை சார்பில், நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது : இந்த கோவில், 300 ஆண்டுகள் பழமையானது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆறு சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு குலதெய்வமாக உள்ளது. அன்னூர் நகரின் முக்கிய கோவிலாக உள்ளது. இந்த கோவிலை அகற்றுவதால், பல ஆயிரம் பக்தர்களின் மனம் புண்படும். கோவிலின் எதிர்ப்புறம் அதிக அளவில் இடம் உள்ளது. அங்கு சாலையை விரிவாக்கம் செய்யலாம். இதுகுறித்து கோவில் செயல் அலுவலரிடமும், கோவையில் அறநிலையத்துறை உதவி ஆணையரிடமும் மனு கொடுத்துள்ளோம். கோவிலை இடித்து அகற்றாமல் சாலையை விரிவுபடுத்தும் படி கூறியுள்ளோம், அன்னூர் தாலுகா அலுவலகத்திலும் எங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அரசு கோவிலை இடிக்காமல் சாலையை அகலப்படுத்தும் பணி செய்ய வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.