மேட்டுப்பாளையத்தில் கல்லறை திருநாள்: கிறிஸ்துவர்கள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2026 04:11
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அற்புத அந்தோணியார் ஆலயம் மற்றும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் சார்பில் கல்லறை திருநாள் நடைபெற்றது.
கிறிஸ்துவர்கள் தங்கள் குடும்பத்தில், இறந்த ஆன்மாக்களை நினைவு கூறும் நாளை, ஒவ்வொரு ஆண்டும் கல்லறை திருநாளாக அனுஷ்டிக்கின்றனர். அந்த வகையில் இன்று மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள ஆர்.சி., கல்லறை தோட்டத்தில் பிலிப், சுதாகர் ஆகிய பாதிரியார்கள் தலைமையில் திருப்பலி நடந்தது. இதே போன்று மாலையிலும் திருப்பலி நடந்தது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்றனர். திருப்பலி முடிந்த பின், பாதிரியார்கள் கல்லறைகள் மீது தீர்த்தம் தெளித்து மந்திரித்தனர். முன்னதாக கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்காரம் செய்தனர். மெழுகுவர்த்தியையும், ஊதுபத்தியையும் ஏற்றி வைத்து வழிபட்டனர். இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். இதே போன்று மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., ஆலயத்திலும், கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது.