Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவிலில் சங்கீத உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
30 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வேதபுரீஸ்வரர் கோவில் குளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
30 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வேதபுரீஸ்வரர் கோவில் குளம்

பதிவு செய்த நாள்

05 நவ
2026
10:11

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில் குளம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணி நடந்து வருகிறது.


புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தற்போதைய வேதபுரீஸ்வரர் கோவில் 1788 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முதலில் ஆரம்பகால இந்த கோவில் 11ல் இருந்து 12 ஆம் நூற்றாண்டு இடைப்பட்ட சோழர் காலத்தில் மிஷன் வீதியில் கட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு பிரெஞ்சு கவர்னர் டூப்ளெக்ஸ் ஆட்சியின் போது, 1748 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று மிஷன் வீதியில் இருந்த இந்த கோவில் பிரெஞ்சுப் படைகளால் முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதன் பிறகு, பிரெஞ்சு அரசிடம் போராடி நிலம் பெறப்பட்டு, 1788 இல் திவான் கந்தப்ப முதலியாரின் முயற்சியாலும், பொதுமக்களின் பங்களிப்பாலும் காந்தி வீதியில் தற்போதைய புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு, இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. கோவில் கட்டுவதற்கு முன்பே கோவிலின் பின்புறத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளம் கி.பி. 1788 ஆம் ஆண்டிற்கு மிக நெருக்கமாக வந்த விகாரி வருடம் கி.பி. 1779 ஏப்ரல் முதல் 1780 ஏப்ரல் வரை நிலவிய காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக குளத்தின் படிக்கட்டு தூணில் உள்ள கல்வெட்டில் உள்ள தகவல்கள் கூறுகின்றன. 


ஒரு ஏக்கர் பரப்பளவில், 40 அடி ஆழம் உள்ள இந்த குளத்தில் 40க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் மற்றும் வட மேற்கு மூலை பகுதியில் ஒரு கிணறும், அதனையெடுத்து அதே திசையில் குளத்தின் மேற்புறத்தில் ஒரு பெரிய கிணறு உள்ளது. மேலும் கோவிலின் உட்புறத்தில், துர்க்கை அம்மன் அருகில் ஒரு கிணறு, மடப்பள்ளியில் ஒரு கிணறும் உள்ளது. கோவிலில் விழும் மழை நீர் மற்றும் அபிஷேக நீர்கள் அனைத்தும் இந்த குளத்தில் விழும்படி அந்த காலத்தில் குளம் கட்டப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் வெளிப்புற சுற்றுப்புறத்தில் இருந்து, நீர் ஊறி குளத்தில் நீர் சேரும் வகையில் அற்புதமான வடிவமைப்பில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குளம் தூர்வாரும் பணி கோயில் நிர்வாக அதிகாரி ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்து வருகிறது. அதனையொட்டி குளத்தில் இருந்த ஒன்னரை டன் கெளுத்தி மீன்கள் மீனவர்கள் மூலம் உயிருடன் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக மூன்று பிளாஸ்டிக் டேங்குகளில் வைக்கப்பட்டுள்ளது. குளம் தூர் வாரிய பின்பு புது நீர் செலுத்தப்பட்டு மீன்கள் விடப்பட உள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு குளம் தூர்வாரப்படுவதால் குளத்தில் இருந்த ஒவ்வொரு மீனும் ஒரு கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar