இன்று ஐப்பசி சுக்ரவார பிரதோஷம்: சிவனை வழிபட்டு இல்லத்திலும் உள்ளத்திலும் சுபிட்சம் பெறுவோம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2026 10:11
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட தெய்வம், நந்தியம்பெருமானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த சிறப்பு வாய்ந்த நாளாகும். ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபடுவது சகல தோஷங்களையும் போக்கும். பிரதோஷ நேரத்தில் சிவன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். இந்த நேரத்தில் அனைத்து தெய்வங்களும் சிவ தரிசனம் செய்கின்றனர். இன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் சிவபெருமான், நந்தீஸ்வரருக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சகல பாவங்களையும் போக்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், கடன் தொல்லைகள், மற்றும் நீண்டகால கஷ்டங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் வழிபடும் இன்றைய தினத்தில் நாமும் வழிபட்டு சிவ கடாக்ஷத்தை பெறுவோம்!