கந்த சஷ்டி விரதம்: பந்தலூரில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2026 12:11
பந்தலூர்: கந்த சஷ்டியை முன்னிட்டு பந்தலூரில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டது.
இன்று கந்த சஷ்டி விரதம் துவங்கியதை தொடர்ந்து, பந்தலூர் முருகன் கோவிலில் அதிகாலை முதல் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு, மாலை அணிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், வரும் 16ஆம் தேதி மாலை 4 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் மற்றும் அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பூஜைகளை ரமேஷ் குருக்கள் தலைமையிலான குழுவினரும், விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன் தலைமையிலான குழுவினரும் செய்து வருகின்றனர்.