குளிர்காலத்திற்காக கங்கோத்ரி கோயில் நடை அடைப்பு; முக்பா கிராமத்திற்கு புறப்பட்ட கங்காதேவி!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2026 04:11
உத்தரகாண்ட்: உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி தாம் கோயில் நடை, அன்னகூடை திருவிழா மற்றும் கோவர்த்தன பூஜையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு இன்று மதியம் 12.05 மணிக்கு குளிர்காலத்திற்காக மூடப்பட்டது. இதையடுத்து, கங்காதேவியின் உற்சவர் திருமேனி வைக்கப்பட்ட பல்லக்கு, அவரது குளிர்கால உறைவிடமான முக்பா கிராமத்திற்குப் புறப்பட்டது. ராணுவ இசைக்குழுவின் இசை மற்றும் பாரம்பரிய மேளதாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜெய் கங்கா மாதா என பக்தி முழக்கமிட்டு கண்ணீர் மல்க கங்காதேவிக்கு விடைகொடுத்தனர். குளிர்காலம் முடிந்து கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் வரை, முக்பா கிராமத்தில் கங்காதேவிக்கு வழிபாடுகள் நடைபெறும்.