குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா: லட்சார்ச்சையுடன் தொடக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2026 05:11
காரைக்குடி: ன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா இன்று லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. சூரசம்ஹாரம் நவ.15ம் தேதி நடக்கிகிறது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளால் லட்சார்ச்சனையை தொடங்கி வைத்தார். மலையிலிருந்து முத்துஸ்கந்தர் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நவ.15 மாலை 3:30 மணிக்கு ஆறுமுக செவ்வேல் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மாலை 4.15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.15 மணி தொடங்கி 6.45 மணிக்குள் சூரசம்கார நிகழ்ச்சியும் நடைபெறும். நவ.16 திரு முழுக்காட்டும், மாலையில் திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கந்த சஷ்டி விழா தொடக்க நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.