Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: அறுந்து விழுந்த கொடியால் பரபரப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: அறுந்து விழுந்த கொடியால் பரபரப்பு

பதிவு செய்த நாள்

10 நவ
2026
05:11

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கொடி அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்போரூரில் உள்ள அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவிலில், நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4:30 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, காலை 5:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. 


கொடி மரத்தின் உச்சியை கொடி அடைந்ததும், சிவாச்சாரியார்கள் கொடி கயிறை கட்ட முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக கொடி அறுந்து பக்தர் மீது விழுந்தது. கொடியில் உள்ள கூர்மையான மூங்கில் கட்டை தலையில் குத்தியிருந்தால் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இதையடுத்து, கிராம மக்கள், ஸ்ரீபாதம் தாங்கிகள் உடனே கொடிமரத்தின் மீது ஏணி அமைத்து, அறுந்து விழுந்த கொடியை புதிய கயிறுடன் பொருத்தினர். அதன்பின், சிவாச்சாரியார்கள் மீண்டும் கொடியேற்றினர். இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன் கொடியேற்றத்தின்போது கொடி அறுந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கொடி அறுந்து விழுந்தால், ஆட்சியாளர்களுக்கு ஆபத்து ஏற்படும் என, ஆன்மிக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கோவில் நிர்வாகம், சிவாச்சாரியார்கள் கொடி கயிறு தரமானதாக உள்ளதா என, முன்னதாக ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டியதால் தான் கொடி கயிறு அறுந்து விழுந்துள்ளது என, பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பின், பல்லக்கு உத்சவத்தில் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு கிளி வாகனத்தில் கந்தப்பெருமான் வீதியுலா வந்தார்.


தினமும் காலை பல்லக்கு உத்சவத்தில் கந்தசுவாமி பெருமான், மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் உற்சவர் மண்டபத்தில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அதேபோல், இரவு ஆட்டுக்கிடா வாகனத்திலும், நாளை இரவு புருஷா மிருக வாகனத்திலும், நாளை மறுநாள் இரவு பூத வாகனத்திலும், வரும் 14ம் தேதி இரவு வெள்ளி அன்ன வாகனத்திலும் கந்தபெருமானின் வீதியுலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், கந்தப்பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்கிறார். அன்றிரவு தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருகிறார். தொடர்ந்து, வரும் 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும், யானை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும். கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar