கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2026 06:11
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 29வது கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
வள்ளி தேவசேனாவுடன் உள்ள கூடல் சுந்தரவேலருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சுவாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் விரதத்தை துவக்கும் வகையில் காப்பு கட்டினர். சுருளிமலை, பழநிமலை பாதயாத்திரை குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் மகாஜன சங்கம், இளைஞர் அணியினர் செய்திருந்தனர். லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா முதல் நாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.