Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடைமுக தீர்த்தவாரி: 16ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி விழாவிற்கு முருகன் சிலை வழங்க கோரி தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்த சஷ்டி விழாவிற்கு முருகன் சிலை வழங்க கோரி தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பதிவு செய்த நாள்

10 நவ
2026
10:11

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமார கட்டளை (முருகன்) சன்னதி தனியாக உள்ளது. இதனை தருமபுரம் ஆதீனம் நிர்வகித்து வருகிறது. முருகன் உற்சவர் சிலை தொடர்பாக திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. தருமபுரம் ஆதீனம் சார்பில் குமார கட்டளையில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று கந்தசஷ்டி விழா தொடக்கத்தையொட்டி முருகன் உற்சவர் சிலையை சிறப்பு பூஜை மற்றும் வீதி உலாவிற்கு தருமபுரம் ஆதீனம் நிர்வாகம் சார்பில் கேட்டபோது துலா உற்சவம் நடப்பதால் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் வீதியுலா செல்வது ஐதீகம் என்பதால் மாயூரநாதர் சுவாமியுடன் சேர்ந்து வழக்கம்போல் வீதி உலா செல்லும் என்று திருவாவடுதுறை ஆதீனம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடன்பாடு ஏற்படாததால் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தபோது கந்த சஷ்டி விழாவிற்கு முருகன் உற்சவர் சிலையை திருவாவடுதுறை ஆதீனம் நிர்வாகம் கொடுக்காமல் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து தம்பிரான் சுவாமிகள் தலைமையில் தருமபுரம் ஆதீன நிர்வாகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சுவாமி அலங்காரம் செய்யப்பட்ட இடத்திற்கு முன்பு தலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நேற்று வழக்கம்போல் விழா தடையின்றி நடக்கட்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண்பது என கூறி முருகன் சிலை தருமபுரம் ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கந்த சஷ்டி விழா பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து வழக்கம்போல் துலா உற்சவத்தையொட்டி சுவாமி புறப்பாடு நடைபெற்றது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar