Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெயர்ச்சியடைந்தார் கேது பகவான்: கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெயர்ச்சியடைந்தார் கேது பகவான்: கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 நவ
2026
05:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களில் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். சாயா கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு மற்றும் கேது பகவான்கள் ஒன்றை ஆண்டுக்கு ஒரு முறை பின்னோக்கி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர். இதனிடையே கேது பகவான் மாலை 5 மணி 14 நிமிடத்திற்கு கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை ஒட்டி நேற்று முன்தினம் மாலை முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இதை அடுத்து நேற்று  காலை  இரண்டாம் கால யாக பூஜை, பரிகார பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு கேது பகவானுக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதனை அடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து கேது பகவானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 5:14 மணிக்கு கேது பெயர்ச்சி தீபாரதனை காண்பிக்கப்பட்டது  கேது பெயர்ச்சியையொட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ராசியினர் பரிகாரம் செய்து கொள்ளலாம். இதில் கோவில் தக்கார் ராணி, செயல் அலுவலர் ரம்யா, திருவெண்காடு கோவில் செயல் அலுவலர் முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கேது பகவானை தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் பட்டு குருக்கள் தலைமை ஆனோர் செய்து வைத்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்- ராகு பகவான் கும்ப ராசிகளில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற கல்பாத்தி தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ள ஐந்தாம் திருநாள் நிகழ்வு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று நாகசதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
இன்று நவ.13ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது.புதுச்சேரி – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar