Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பக்தர்களுக்காக கொச்சி விமான ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சத்திரம் காட்டு வழியில் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல துவங்கினர்: 19ம் முறையாக முதலில் சென்ற சரத் குழு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்திரம் காட்டு வழியில் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல துவங்கினர்: 19ம் முறையாக முதலில் சென்ற சரத் குழு

பதிவு செய்த நாள்

17 நவ
2026
05:11

மூணாறு: சத்திரம், புல்மேடு பாரம்பரிய காட்டு வழியில் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல துவங்கினர்.


இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை 12 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த பாரம்பரிய காட்டு வழியில் பக்தர்கள் நடந்து செல்வதுண்டு. பெரியாறு புலிகள் காப்பகம் வனத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வழியில் இன்று முதல் பக்தர்கள் செல்ல துவங்கினர். சத்திரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் டோக்கன் வழங்கப்பட்டு, பிளாஸ்டிக் உள்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என சோதனைக்கு பின் காட்டு பாதையில் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முதல் குழுவாக 19 வது முறை: கொல்லம் பரவூர், நெடுங்கோலம் பகுதியைச் சேர்ந்த சரத் தலைமையிலான பக்தர்கள் குழு, சத்திரம் காட்டு வழியில் கடந்த 18 ஆண்டுகளாக முதல் முதலாக சென்றனர். அக்குழு இன்று முதல் டோக்கன் பெற்று 19ம் ஆண்டாக முதலில் சென்றனர். இந்த முறை குழுவில் சிறுவன், சிறுமி உள்ளனர். முன்பதிவு: வண்டி பெரியாறு, வாலார்டி ஆகிய பகுதிகளில் முன்பதிவு மையங்கள் உள்ளன. வாலார்டியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கு ஏற்ப கூடுதல் வசதிகள் செய்யப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். 


நேரம்: சத்திரத்தில் இருந்து தினமும் காலை 7:00 முதல் மதியம் 2:00 மணி வரை காட்டு வழியில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறனர். காட்டு வழியில் செல்லும் பக்தர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும், வனப் பகுதியில் குப்பைகளை வீசாமலும், வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்காமலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பயணத்தை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. அதிகாலை 3.00 மணிக்கு புதிய மேல் சாந்தி ... மேலும்
 
temple news
சென்னை: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்களை, தமிழக ... மேலும்
 
temple news
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ... மேலும்
 
temple news
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல ... மேலும்
 
temple news
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar