Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 62 நாள் மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவு ... மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: தினமும் 80,000 பக்தர்களுக்கு அனுமதி1 மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை நடை இன்று மாலை திறப்பு மண்டல காலம் நாளை தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை இன்று மாலை திறப்பு மண்டல காலம் நாளை தொடக்கம்

பதிவு செய்த நாள்

16 நவ
2026
01:11

சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.


இங்கு இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். பின்னர் கோயிலை வலம் வந்து 18 படிகள் வழியாக இறங்கிவந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். தொடர்ந்து இருமுடி கட்டுடன் 18 படிகளின் கீழே நின்று கொண்டிருக்கும் புதிய மேல் சாந்திகளான சபரிமலை - சுப்ரமணியன் நம்பூதிரி, மாளிகைபுறம் - தாமோதரன் நம்பூதிரி ஆகியோரை சன்னிதானம் முன்புறம் அழைத்து வருவார். இவர்களுக்கு தந்திரி பிரம்ம தத்தன் அபிஷேகம் செய்து மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து முறைப்படி அவர்களை மேல் சாந்திகளாக பதவியேற்க செய்வார். இன்று இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி சுப்பிரமணியன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். தொடர்ந்து 40 நாட்கள் பூஜைகள் நடைபெற்று 41-வது நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது. எல்லா நாட்களிலும் ஐயப்பனுக்கு களபாபிஷேகம் உண்டு. பக்தர்கள் படியேறுவதை ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதால், மண்டல காலத்தில் படி பூஜை கிடையாது.


அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 3:00 மணிக்கு நடை திறந்து இரவு 11:00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி குறைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவை முழுமையாக பயன்படுத்தும் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. பம்பையில் இந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் கவுன்டர் கிடையாது. பம்பையில் நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் வகையில் நிலக்கலிலும் ,பம்பையிலும் தலா 2000 பக்தர்கள் தங்குமளவு ஜெர்மன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கல் ,பம்பை , சன்னிதானத்தில் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அன்னதானம் ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலையில் நேற்று மேகமூட்டம் இருந்தாலும் மழை பெய்யவில்லை

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகர விளக்கு புனித யாத்திரை இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar