பதிவு செய்த நாள்
13
பிப்
2013
11:02
சுருட்டப்பள்ளி: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை, 1.60 லட்சம் ரூபாய் இருந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விசேஷங்கள் இங்கு முக்கியமானவை. விடுமுறை நாட்களில் தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர். மூலவர் வால்மீகீஸ்வரர், அன்னை மரகதாம்பிகை, பள்ளிகொண்டேஸ்வரர் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற பணத்தை செலுத்துவர். அவ்வாறு பக்தர்கள் பணம், செலுத்த ஒன்பது உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் உண்டியல் களில் உள்ள பணத்தை எண்ணும் பணி நடந்தது. சித்தூர் மாவட்ட கோவில்களின் மூத்த அதிகாரி கணபதி சாஸ்திரி முன்னிலையில், கோவில் மேலாளர் சுப்பிரமணியம் தலைமையில், பக்தர்கள், கோவில் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 1,60,712 ரூபாய் பணம் இருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.