Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டு தலங்களுக்கு பயணிக்க ... உடுக்கை அடித்து அய்யப்பன் வரலாறு உடுக்கை அடித்து அய்யப்பன் வரலாறு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெலுங்கானாவில் இருந்து 2 பேர் ஆன்மிக பயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தெலுங்கானாவில் இருந்து 2 பேர் ஆன்மிக பயணம்

பதிவு செய்த நாள்

19 நவ
2026
11:11

திருவாடானை: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் வரை நடைபயணம் வந்தனர். தெலுங்கானா சங்காநெட்டி மாவட்டம் பிவிபிட்டு ஊரை சேர்ந்தவர்கள் சாயிலு 51, அஞ்சையா 45. இருவரும் உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும், தங்கள் ஊரிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புறப்பட்ட இவர்கள் ஹைதராபாத், கடம்பூர் வழியாக 1200 கி.மீ. நடந்து தமிழகத்தில் பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக ராமேஸ்வரத்தை நோக்கி செல்கின்றனர்.

நேற்று திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். புளியால் அருகே அப்பகுதி மக்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்கள் வரவேற்பு அளித்தனர். நீண்ட துாரம் நடந்து வந்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யும் இவர்களின் பக்தியையும், உறுதியையும் பாராட்டி தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர்.

குடும்பத்தினரையும் சொந்த ஊரையும் பிரிந்து வெயில் மழையை பொருட்படுத்தாமல் வருவதை மக்கள் பாராட்டினர்.

அவர்கள் கூறுகையில், நாட்டு மக்கள் நலமுடன் வாழ பாத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். ராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு அதன்பிறகு காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில்  ஐந்தாம் நாள் காலை  உற்சவத்தில், ... மேலும்
 
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 
temple news
மூணாறு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் சத்திரம் களை கட்டியது.இடுக்கி ... மேலும்
 
temple news
மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க, நாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar