Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் அறநிலையத் ... ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 நவ
2026
10:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடந்த நூறு ஆண்டுகளாகவே கும்பாபிஷேகம் நடத்தப்படாத நிலையில், கோயில் சிதிலமடைந்து முற்றிலுமாக இடிந்ததால், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 14 விக்கிரகங்களும் கீற்றுக் கொட்டகையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கிராம மக்கள் முயற்சியால் கடந்த 2017-ஆம் ஆண்டு கோயிலுக்கு திருப்பணி நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. இருப்பினும் திருப்பணி நடைபெறாத நிலையில், திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தகுரு வித்யாலயா ஸ்தாபகர் ராஜா பட்டர்-கோமதி அம்மாள் ஆகியோரின் மணிவிழாவின் ஒரு அங்கமாக, அவ்வித்யாலயா மாணவர்களின் மூலமாக திருப்பணி செய்யப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. விழா கடந்த புதன்கிழமை முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாசாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சுந்தரேஸ்வரர் பெருமான் மற்றும் மீனாட்சி அம்பாளுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேஷம்:ஆபத்சகாயேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். சுகஸ்தான கேதுவால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி ... மேலும்
 
temple news
கோவை: கார்த்திகை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவைஉக்கடம் பைபாஸ் சுண்டைக்கா ... மேலும்
 
temple news
திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 101-வது பிறந்த நாள் விழாவையொட்டி, திருப்பூர் ஸ்ரீ சாய் மந்திர் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில்  ஐந்தாம் நாள் காலை  உற்சவத்தில், ... மேலும்
 
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar