பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழா வரும் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டு அவரது 100-வது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாக ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 101-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று (20-ம் தேதி) மாலை 5:00 மணிக்கு 100-வது திருவிளக்கு பூஜையுடன் விழா தொடங்குகிறது. நாளை (21-ம் தேதி) முதியோர் இல்லத்துக்கு விஜயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 22-ம் தேதி காலை 8:00 மணிக்கு 101 நாம சங்கீர்த்தன பஜன், மதியம் 2:00 மணிக்கு நாராயண சேவைக்கான உணவு தயாரிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி பிறந்த நாள் விழா காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், பிரசாந்தி கொடியேற்றம், ருத்ர பாராயணம் நடைபெறுகின்றன. மாலையில் திருவீதியுலா, இசை நிகழ்ச்சி, சிறப்பு சொற்பொழிவு, ஊஞ்சல் உற்சவம், மங்கள ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.