Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய் 101வது பிறந்த நாள் விழா இன்று ... திருப்பதி அன்னபிரசாத வளாகத்தில் ஆயுத பூஜை; தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்! திருப்பதி அன்னபிரசாத வளாகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கார்த்திகை கைசிக ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட 108 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன் கிடைக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று கார்த்திகை கைசிக ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட 108 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன் கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

20 நவ
2026
11:11

கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து பெருமாள் கண் விழிக்கிறார். இன்றைய தினம் உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். பழம், பால், பயத்தம் கஞ்சி சாப்பிட்டு பகவானை பிரார்த்திக்க நல்ல பயன் பெறலாம். இன்று துளசியை வணங்குபவர்கள் பாவங்களில் இருந்து விடு படுவார்கள். 


மார்கழியில் வரும் ஏகாதசி திருநாள் வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. இதுபோல் கார்த்திகையில் வரும் ஏகாதசி கைசிக ஏகாதசி எனப்படுகிறது. திருக்குறுங்குடி என்னும் தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அழகிய நம்பிராயரை, முற்காலத்தில் நம்பாடுவான் என்பவர் பயபக்தியோடு வணங்கி வந்தார். ஒருநாள் ராட்சசு ஒன்று அவரை சாப்பிட நெருங்கியது. கோயில் சென்று பெருமாளை சேவித்தபின், மீண்டும் உன்னிடம் வந்துவிடுகிறேன். அதன்பின் என்னை உணவாக்கிக் கொள் என்றார் நம்பாடுவன். ராட்சசும் சம்மதித்தது.  சொன்னதுபோலவே கோயிலுக்கு சென்று திரும்பிய நம்பாடுவான், ராட்சசு அருகில் வந்தார். தன்னை சாப்பிடுமாறு வேண்டினார். அவரது நேர்மையாலும், பக்தியாலும் ராட்சசு சாப விமோசனம் பெற்று, மனிதனானது. இந்த வரலாற்றை நினைவு கூர்வதே கைசிக ஏகாதசி திருநாள். இவ்விழா திருக்குறுங்குடி, நான்குநேரி, ஸ்ரீரங்கம் போன்ற குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. அன்று இரவில் சிலர் நம்பாடுவான் போன்றும், ராட்சசு போன்றும் வேடமணிந்து, கைசிக புராணத்தை நடித்துக் காண்பிப்பார்கள்.  இன்று விரதம் இருந்து பெருமாளை வழிபடுவோம்.. பூலோகத்திலேயே சொர்க்க வாழ்வுவை பெறுவோம்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... மேலும்
 
temple news
மேஷம்:ஆபத்சகாயேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். சுகஸ்தான கேதுவால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி ... மேலும்
 
temple news
கோவை: கார்த்திகை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவைஉக்கடம் பைபாஸ் சுண்டைக்கா ... மேலும்
 
temple news
திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 101-வது பிறந்த நாள் விழாவையொட்டி, திருப்பூர் ஸ்ரீ சாய் மந்திர் ... மேலும்
 
temple news
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகத்தில் வியாழக்கிழமை ஆயுத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar