ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 108 போர்வை சாற்றும் வைபவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2026 10:11
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 11:00 மணிக்கு மேல் வடபத்ரசயனர் சன்னதி கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், வடபத்ரசாயி, ஸ்ரீதேவி, பூமாதேவி, 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அங்கு குளிர்காலம் துவங்குவதை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.