Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி அன்னபிரசாத வளாகத்தில் ... கார்த்திகை தீபத்திருவிழா அகல்விளக்கு விற்பனை துவக்கம் கார்த்திகை தீபத்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை 5ம் நாள் தீப திருவிழாவில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை 5ம் நாள் தீப திருவிழாவில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

பதிவு செய்த நாள்

20 நவ
2026
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐந்தாம் நாள் தீப திருவிழாவில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று ஐந்தாம் நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து காலையில், மூஷிக வாகனத்தில் விநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் (உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம் ) வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், வெள்ளி சின்ன ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும், நாளை பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு ஐந்து தேர்களுக்கும் கலசம் பொருத்தும் பணி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... மேலும்
 
temple news
மேஷம்:ஆபத்சகாயேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். சுகஸ்தான கேதுவால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் வளாகம் முழுவதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பக்தி முழக்கம் ஒலித்து ... மேலும்
 
temple news
கோவை: கார்த்திகை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவைஉக்கடம் பைபாஸ் சுண்டைக்கா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar