அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்கள்! இந்த வாரத்தில் மட்டும் 2 லட்சம் பேர் தரிசனம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2026 12:11
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் வளாகம் முழுவதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பக்தி முழக்கம் ஒலித்து வருகிறது. சௌதா கோசி பரிக்ரமாவில் பங்கேற்பதற்காக அயோத்திக்கு வந்துள்ள பக்தர்கள், ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க அதிக அளவில் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இதனால் ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த வாரத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் பக்தர்கள் ஸ்ரீராம்லல்லாவை தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிக்ரமாவுக்கு வரும் பக்தர்களின் வருகையால் அயோத்தி நகரமே ராம நாம முழக்கத்துடன் ஆன்மிகப் பேரெழுச்சியில் திளைத்து வருகிறது.