சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 51ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2026 10:11
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 51ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. தொடர்ந்து கைசிக ஏகாதசியையொட்டி இரவு புராணம் வாசிக்கப்பட்டது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று ஏக தின லட்சார்ச்சனை விழா காலையில் துவங்கியது. மூலவர் பரமசுவாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கு துளசி மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை நடந்தது. இரவு 8:00 மணி வரை பெருமாளின் 1008 திருநாமங்கள் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டன. 9:00 மணிக்கு மகாதீப ஆராதனையுடன் லட்சார்ச்சனை நிறைவடைந்து, இரவு 10:00 மணிக்கு கைசிக புராணம் வாசிக்கப்பட்டது. இது வராக அவதாரத்தில் பூமாதேவியை காத்த போது வராகப் பெருமாள் அருளியதாக புராணம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக கார்த்திகை மாத வளர்பிறையில் கைசிக ஏகாதசி வருகிறது. அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் 108 ஏகாதசிகள் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.