மதுக்கரை: மதுக்கரை மரப்பாலம் பகுதியிலுள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமி, தீபம் முன்னிட்டு, அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தர்மலிங்கேஸ்வரருக்கு தேன், இளநீர், பால், தயிர், திருமஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், மீண்டும் தர்மலிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் பவுர்ணமி என்பதால் காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சுற்றினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு செய்திருந்தது.