உத்திரமேரூர்: நுாக்கலம்மன் கோவிலில், கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நேற்று நடைபெற்றது.
உத்திரமேரூர் – எல்.எண்டத்துார் சாலையில், நுாக்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி வழிபாடு நடைபெறுகிறது.
அந்த வகையில், கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 12:30 மணிக்கு அன்னதானம், மாலை 7:30 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உத்சவம் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.