Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு கண்ணுகோட்டு பகவதி அம்மன் ... பதற்றம் குறையாக திருப்பரங்குன்றம் 2வது நாளாகவும் போலீஸ் குவிப்பு: மலைமேல் செல்ல தடை பதற்றம் குறையாக திருப்பரங்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் சிலைகள் மாயமான வழக்கு: புதிய சிலைகளை அமைக்க சிவாச்சாரியார்கள் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரியகோவிலில் சிலைகள் மாயமான வழக்கு: புதிய சிலைகளை அமைக்க சிவாச்சாரியார்கள் ஆய்வு

பதிவு செய்த நாள்

25 நவ
2026
03:11

தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் எட்டு திசைகளில் ஆகம விதிகள்படி, இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் உள்ளிட்ட அஷ்டதிக் பாலகர்களின் சன்னிதிகள் உள்ளன. இதில், இந்திரன், எமன், நிருதி, குபேரன் ஆகிய நான்கு சன்னிதிகளில் சிலைகள் இல்லை. பிற நான்கு சன்னிதிகளில், சிலைகள் சிதைந்துள்ளன.பக்தர்கள் வழிபடவும், பூஜைகள் தடையின்றி நடக்கவும், சன்னிதிகளை முறையாக பராமரிக்கவும், சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக, புது சிலைகள் நிறுவ அனுமதிக்க, மத்திய தொல்லியல்துறை அனுமதி தர வேண்டும் என, தஞ்சையை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர், 2019ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் புத்தனேந்தல் அழகர்சாமி பாண்டியன் மற்றும் துாத்துக்குடி மாவட்டம் சின்ராஜ் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். 


இம்மனுக்களை, கடந்த செப்.28ம் தேதி, விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, "சிதைந்த சிலைகளுக்கு, பதிலாக புது சிலைகளை நிறுவ வேண்டும். புது சிலைகள் நிறுவ நிபுணர்கள், ஸ்தபதிகளின் ஒப்புதலை பெற வேண்டும். இந்நடவடிக்கைகளை கலெக்டர், தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை கமிஷனர், மத்திய தொல்லியல்துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோவிலின் பரம்பரை அறங்காவலர் 3 மாதங்களில் துவங்கி, 12 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், பிள்ளையார்பட்டி வேதாகம வித்யாலயா பாடசாலை பொறுப்பாளர்  பிச்சை சிவாச்சாரியார்,  திருப்பரங்குன்றம், ஸ்ரீகந்தகுரு சிவாகம வேத பாடசாலை பொறுப்பாளர் ராஜா பட்டர் சிதைந்த சிலைகள், மாயமான சிலைகளின் சன்னிதிகளை ஆய்வு செய்தனர். சிலைகள் வடிவமைப்பு தொடர்பாக, தஞ்சாவூர் மண்டல ஸ்பதி அருளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்வதானம் உதவி கமிஷனர் கவிதா, அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் சுந்தரராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் இன்று புதன்கிழமை (நவம்பர் 25) காலை காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தேவ் தீபாவளி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar