காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடந்து முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நேற்று அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று யாகசாலை பூஜைகள் இ.ஏ.பிரபாகர குருக்கள் தலைமையில் மற்றும் கோவில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள் ஆகியோரால் நடைபெறுகிறது. தொடர்ந்து, நவ., 29ம் தேதி 6ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு செய்து பூரணாஹூதி தீபாராதனைக்குப் பின்னர் யாகசாலையிலிருந்து புனிதநீர்க் குடங்கள் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதிகாலை 4:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். றங்காவலர் குழுவின் தலைவர் கே.தியாகராஜன், திருப்பணி உபயதாரர்கள் ராதாகிருஷ்ணன், பச்சையப்பாஸ் பிரபு, நவீன்குமார், சிறுணை வெங்கடேசன், பிரவீன், முருகேஷ் மற்றும் ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.