Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் மலைமேல் உள்ள இராக்காயி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம்: ஜோதி வடிவாய் காட்சி தந்த முருகன்.. நூறாண்டு கனவு நிறைவேறியது. பரவசத்தில் பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம்: ஜோதி வடிவாய் காட்சி தந்த முருகன்.. நூறாண்டு கனவு நிறைவேறியது. பரவசத்தில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 நவ
2026
05:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் நூறாண்டுகளுக்குப் பின்பு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது.‌ உணர்ச்சி பெருக்கால் பக்தர்கள் கண்ணீர் மல்க அரோகரா கோஷம் எழுப்பி தீப தரிசனம் செய்தனர்.‌ ஜோதி வடிவாய் காட்சி தந்த முருகப்பெருமானை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பரவச தரிசனம் செய்து வருகின்றனர்.


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கடந்தாண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மலை மேல் சென்று தீபத் தூணை நேரடியாக ஆய்வு செய்தபின்பு தீபத் தூணில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அப்போதைய தி.மு.க., அரசு தீபம் ஏற்றுவதற்கு தடை விதித்தது. இந்தாண்டு திருக்கார்த்திகை நாளான நவ. 24 ஒரு நாள் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நவ.‌20 ல் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக த.வெ.க‌., அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. மேலும் நவ. 23 இரவு முதல் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. 6 ஆயிரம் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


மலை மேல் மட்டும் 1800க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் முழுவதையும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அன்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இன்று நவ. 28 தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.‌ நேற்று மாலையில் முருக பக்தர்கள் ஹிந்து அமைப்பினர் கோயில் முன்பு கூடி மகிழ்ச்சி கொண்டாடினர். இரவு 11:30 மணிக்கு கோவையில் இருந்து சி.ஆர்.பி.எப். படையினர் 130 பேர் திருப்பரங்குன்றம் வந்தனர். கோயில் முன்பு படையினர் வந்த வாகனங்களுக்கு கிராமத்தினர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இரவு 12:00 பா.ஜ., வினர் தீபம் ஏற்றுவதை வரவேற்று போஸ்டர் ஒட்டினார். ஹிந்து மக்கள் கட்சி சார்பில் ஊர் முழுவதும் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியை துவக்கினர். கோயில் நிர்வாகமும் பல பகுதிகளில் அலங்கார விளக்குகளும், முருகன் அலங்கார விளக்குகளும் மலை படிக்கட்டுகளில் மின்விளக்குகளும் அமைத்தனர்.


இன்று காலை 6:00மணிக்கு தீப தூணில் மூங்கில் தடுப்புகள் கட்டும் பணி துவங்கி 10:00 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் வீடுகள் தோறும் முருகன் மஞ்சள் பொடி கட்டி வாசலில் தீபம் கோலம் வரைந்தனர். நகர் முழுவதும் முருகன் பக்தி பாடல்களும் அரோகரா கோஷங்களும் வெற்றிவேல் வீரவேல் என்ற பாடலும் தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டே இருந்தனர். காலை 9:00 மணிக்கு தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் மலை மேல் சென்றனர். காலை 9:40க்கு தீப தூணில் தீபம் ஏற்ற கோயில் சார்பில் களிமண் கோணிசாக்கு, கற்பூரம், பூஜை பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. காலை 9:45 மணிக்கு திருப்பூர், சேலம் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை மேல் சென்றனர். மலை மேல் சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கிராமத்தினர் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். காலை 10:00 மணிக்கு பழநி ஆண்டவர் கோயில் அருகே ஹிந்து முன்னணி சார்பில் பக்தி பாடல்கள் ஒளிபரப்பிய குழாய்களை அகற்ற போலீசார் கூறினர். வீரர்கள் வந்ததற்கு பின்பு அவர்களை கேட்டு முடிவு செய்கிறோம் என கூறினார். அதற்கு கூட்டச் செயலாளர்கள் அரசு பாண்டி தெரிவித்தார்.


காலை 10:15 மணிக்கு மலை மேல் மருத்துவக் குழுவினர் முதலுதவி பொருட்களுடன் சென்றனர். நகர் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்கள் நடமாடும் டூவீலர் மருத்துவக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டனர்.‌ காலை 11:00 மணிக்கு தீபம் ஏற்றக்கூடிய மண் அகல் விளக்கு, நெய், திரி, கற்பூரம் ஆகியவை சுப்பிரமணியசாமி கோயில் மூலஸ்தானத்தில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. நீதிபதிகள், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தீபம் ஏற்றும் அகல் விளக்குகளை கோயிலுக்குள் கொண்டு சென்றனர். காலை 11:00 மணிக்கு மேல் பழநி ஆண்டவர் கோயில் படிக்கட்டு வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு புது படிக்கட்டு வழியாக சுவாமி தரிசனம் செய்ய மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 11 40 மணிக்கு சி.ஆர்.பி.எப். ஐ.ஜி. விக்ரம் அதிகாரி தலைமையில் வீரர்கள் மலை மேல் சென்றனர். மதியம் 12:00 மணிக்கு ஹகந்து மக்கள் கட்சி சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்தனர். மதியம் 12:23 மணிக்கு திருவண்ணாமலை இருந்து வரவழைக்கப்பட்ட தீப நிபுணர்கள் தீபம் ஏற்றக்கூடிய அகல் விளக்குகள், கற்பூரம், திரி, நெய், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், விபூதி, தீப்பெட்டி ஆகியவற்றுடன் மேள தாளங்கள் முழங்க மலை மேல் சென்றனர். பழநி ஆண்டவர் கோவில் முன்பு தீபம் ஏற்றும் பூஜை பொருட்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு மலை மேல் செல்லக்கூடிய பழநி ஆண்டவர் கோயில் தெரு, பெரிய ரவிதி சந்திப்பு பாதையை போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து தடுத்து பொதுமக்கள் செல்ல தடை விதித்து, நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்களுடன் 10 பேர் மட்டுமே மலை மேல் செல்ல அனுமதிக்கப்படுகிறது அதனால் யாரும் மலை மேல் செல்ல வேண்டாம் என போலீசார் அறிவிப்பு செய்தனர். காலை 11:30 வரை முருகன் பக்தர்கள், இஸ்லாமியர்கள் மலை மேல் செல்ல ஆதார் அட்டை காண்பித்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்பு தடை செய்யப்பட்டனர். மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அரவாளி தலைமையில் குழுவினர் மதியம் 2:30 மணிக்கு மழை மேல் சென்றனர்.


பக்தர்கள் மலை மேல் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., நிர்வாகிகள் குடியிருந்த பக்தர்களிடம் அனைவரும் 16 கால் மண்டபம் அருகே சென்று நின்று தீப தரிசனத்தை செய்யுங்கள். தயவு செய்து கோஷங்கள் எழுப்ப வேண்டாம். நமது நோக்கம் தீபம் ஏற்றுவது மட்டுமே.‌ தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என கைகூப்பி வணங்கி அனைவரையும் கலந்து செல்ல அறிவுறுத்தினர். 


தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மண் அகல் விளக்குகள், 10 லிட்டர் நெய், இரண்டு கிலோ சூடம், காடா துணி திரி பயன்படுத்தப்பட்டது. தீப தூணில் மேல் பகுதியில் களிமண் வைக்கப்பட்டு அதன் மேல் மூன்று அகல் விளக்குகள் வைத்து மேல் பகுதியில் உள்ள அகல் விளக்கில் நெய், திரி, கற்பூரம் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.‌ நூற்றாண்டு கனவு நிறைவேறியது என ஜோதி வடிவாய் காட்சி தந்த முருகப்பெருமானை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பரவச தரிசனம் செய்து வருகின்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
வாரணாசி: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar