பதிவு செய்த நாள்
14
பிப்
2013
10:02
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், மகாசிவராத்திரி உற்சவம், மார்ச் 10 ம் தேதி இரவு துவங்கி, 11ம் தேதி அதிகாலை வரை நடக்கிறது. அன்று அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக சாமான்களை கொண்டு, ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய் நெய் போன்றவைகளை மார்ச் 10 மாலை, கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். இத்தகவலை கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.