செஞ்சி: வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் விஸ்வரூப அங்காளபரமேஸ்வரி சுதை சிற்பத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். மேல்மலையனூர் ஒன்றியம் வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் புதிதாக அமைத்துள்ள விஸ்வரூப அங்காளம்மன் சுதை சிற்பத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதை முன்னிட்டு நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், கோ பூஜை, அஷ்ட திரவிய ஹோமம், விசேஷ மூலிகை ஹோமம் ஆகியன செய்கின்றனர். காலை 9.50 மணிக்கு விஸ்வரூப சுதை சிற்ப அங்காளபரமேஸ்வரிக்கு மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் சண்முகம் கலந்து கொள்கிறார்.