பதிவு செய்த நாள்
22
பிப்
2013
10:02
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் ஃபிப்ரவரி மாதம் மாசி குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான மாசி குண்டம் திருவிழா, நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு குண்டம் இறங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையடிக் குட்டையில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலமாக எடுத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தனர். மேலும், அம்மன் அழைத்தல், குலாலர் வீட்டில் இருந்து அக்னிச் சட்டி அழைத்து வந்து சக்திகரக திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, இன்று இரவு, 108 அக்னி கரகம் மற்றும் அலகு குத்துதல், நான்கு ரத வீதிகளில் உலா வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனையும் நடக்கிறது.