இப்படி ஒரு பெயரைக் கேள்விப் பட்டதே இல்லையே என்பவர்கள் மேற்கொண்டு படியுங்கள். தேவலோகத்தில் இந்திரனின் தலைமையிலான தேவர்களின் பரம விரோதிகள் அசுரர்கள். இந்த அசுரர்களைத் தான் பிசிதாசனர் என்பர். பிசித அசனர் என்று இச்சொல்லைப் பிரிக்க வேண்டும். பிசிதம் என்றால் மாமிசம். அசனம் என்றால் உணவு. அசுரர்கள் மிருகங்களின் மாமிசத்தை மட்டுமல்ல, மனிதனையே விழுங்கி விடுபவர்களாக இருந்தனர். ராவணன் சீதையை மிரட்டும் போது, நீ என்னுடன் வாழாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று மட்டும் சொல்லவில்லை, தின்று விடுவேன் என்றும் மிரட்டினான். இனிமேல் நான்வெஜ் பிரியர்களுக்கு பிசிதாசனர் என்று பட்டப்பெயர் சூட்டி விடலாம், சரிதானே!