புதுச்சேரி: தீர்த்தவாரிக்கு வந்த தீவனூர் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு, சுதானா நகர் செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தீவனூர் லட்சுமி நாராயணப் பெருமாள், மாசி மக தீர்த்தவாரிக்காக புதுச்சேரி வருகை தந்துள்ளார். தீர்த்தவாரியை முடித்த லட்சுமி நாராயணப் பெருமாள் சாமிக்கு, கடந்த 26ம் தேதி பத்ம விநாயகர் கோவிலில் திருமஞ்சனம், மகா தீபாரா தனை நடந்தது. விசேஷ அலங்காரத்துடன் தியாகராஜா வீதி, மிஷன் வீதி, நேரு வீதி, காந்தி வீதி, கடலூர் சாலை வழியாக நைனார்மண்டபம் சுதானா நகர் செல்வ விநாயகர் கோவிலுக்குச் சென்றடைந்தார். அங்கு லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பகல் 11 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.இன்று 28ம் தேதி காலை 6 மணிக்கு பெருமாளுக்கு வழியனுப்பு விழா நடக்கிறது.