வென்னிமலை முருகன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2013 11:02
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். பாவூர்சத்திரம் காமராஜர் நகரில் உள்ள வள்ளி தேவசேனாசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் நடந்த விழாவை சமுகத்தை சேர்ந்த பொதுமக்கள் முன்னின்று நடத்தினர். 10ம்நாள் விழா முன்னிட்டு காலையில் கீழப்பாவூர் சிவன் கோயிலிருந்து பால்குடம், பனையடிப்பட்டி ,குரும்பலாப்பேரி, செட்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அலகு குத்தி காவடி எடுத்து பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜை மற்றும் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழக்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் வியாபாரிகள் மற்றும் நற்பணி மன்றத்தினர் நீர்மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்கினர். இரவில் சுவாமி திருவீதிஉலா நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் இன்னிசை கச்சேரியும், மற்றும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வென்னிமலை முருகனை வழிபட்டனர்.11ம் நாள் விழாவில் சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.