பதிவு செய்த நாள்
28
பிப்
2013
11:02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு கம்பம் நடப்பட்டது. சத்தியமங்கலம் அடுத்துள்ளது அரியப்பம்பாளையம். இங்குள்ள ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவிலில், மாசி மாதம் குண்டம் விழா நடக்கிறது. இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியில் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டது.
இக்கம்பத்துக்கு நேற்று பெண்கள் தண்ணீர் ஊற்றியும், மஞ்சள் பூசியும் வணங்கினர். மார்ச், நான்காம் தேதி காப்புகட்டுதல் மற்றும் அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், ஆறாம் தேதி அதிகாலை கோவில் முன் அமைக்கப்பட்ட, 60 அடி தீ குண்டத்தில் பக்தர்கள், தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. பின், சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. அதேநாள் காலை, 10 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை, 5 மணிக்கு அக்னி கும்பம் எடுக்கின்றனர். இரவு, ஏழு மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு, 9 மணிக்கு கேரளா ஜண்டை வாத்தியத்துடன், அம்மன் புஷ்ப பல்லாக்கில் நகர்வலம் வருகிறார். அப்போது அரியப்பம்பாளையம் புளியம்பட்டி பிரிவில், 50 ஆயிரம் பட்டாசு வெடிக்கும் வான வேடிக்கை நடக்கிறது. மார்ச் ஏழாம் தேதி மஞ்சர் நீர் உற்சவமும், மார்ச், 12ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது.